search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனி கலெக்டர்"

    கஜா புயல் எதிரொலியாக, தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் உத்தவிட்டுள்ளார். #Gaja #GajaCyclone
    தேனி:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது..

    கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை - வேதாரண்யம் இடையே காலை கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலையில், கஜா புயல் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளன.

    இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்காலுக்கு மீட்பு பணிகளுக்காக கடற்படையை சேர்ந்த 2 கப்பல்கள் விரைந்துள்ளன. தர்ஷாக், கார்னிகோபார், கொராதிவ் ஆகிய கப்பல்கள் சென்னையில் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் சேதமடைந்த 29,500 மின்கம்பங்கள், 205 மின்மாற்றிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone
    ×